மேற்கு வங்கத்தில் ஜூலை 15-வரை ஊரடங்கு நீட்டிப்பு…!
மேற்கு வங்கத்தில் ஜூலை 15-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு.
மேற்கு வங்கத்தில் ஜூலை 1-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஜூலை 15-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சலூன் கடைகள், அழகு நிலையங்கள் 50 சதவிகித இருக்கை வசதிகளுடன் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பணிபுரியும் ஊழியர்கள் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்.
உடற்பயிற்சிக் கூடங்கள் 50 சதவீத நபர்களுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.