மாதம் 5 லட்சம் சம்பளம் வாங்கி, அதில் 2.75 லட்சம் வரி செலுத்துகிறேன் – குடியரசு தலைவர்!
மாதம் 5 லட்சம் சம்பளம் வாங்கி, அதில் 2.75 லட்சம் வரி செலுத்துவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள கான்பூரில் உள்ள தனது சொந்த ஊரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர் தனக்கு மாதம் 5 லட்சம் சம்பளம் கிடைப்பதாகவும், அதில் 2.75 லட்சம் வரி செலுத்துவதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் அனைவரும் முறையாக வரி செலுத்த வேண்டும் எனவும், இது இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் எனவும் கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் பலர் குடியரசுத் தலைவர் எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்பதை பற்றி பேசுகிறார்கள், ஆனால் என்னைவிட அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.