ஜூலை மாதம் தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து 71 லட்சம் தடுப்பூசிகள் வருகை – மா.சுப்பிரமணியம்!

அடுத்த மாதம் தமிழகத்திற்கு 71 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தருவதாக மத்திய அரசு கூறியுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் மும்முரமாக நடைபெறுகிறது. மேலும், மக்கள் அதிகளவில் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுவதால் சில பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து தற்பொழுது பேசியுள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள், தமிழகத்தில் இதுவரை 1.44 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 1.41 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், வருகிற ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு 71 லட்சம் தடுப்பூசி தருவதாக கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக இன்று மாலை இரண்டு லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.