டி 20 உலகக் கோப்பை போட்டி நடைபெறும் இடம் – பிசிசிஐ அறிவிப்பு..!
டி 20 உலகக் கோப்பை போட்டிகளானது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த டி 20 உலகக் கோப்பை போட்டியானது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று அறிவித்ததாக பிடிஐ தெரிவித்துள்ளது.
மேலும்,இதுகுறித்து கங்குலி கூறுகையில்:”டி 20 உலகக் கோப்பை போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற நாங்கள் ஐ.சி.சி.க்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளோம்.அதன்படி,போட்டியானது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் நடைபெறும்”,என்று தெரிவித்துள்ளார்.