அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் முறையில் குழந்தை பெற வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

Default Image

அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் முறையில் குழந்தை பெற வேண்டும் என  அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு பிரசவம் இரண்டு முறைகளில் நடக்கிறது. ஒன்று இயற்கையான முறையில் பிரசவம், மற்றொன்று அறுவை சிகிச்சை முறையில் பிரசவம். ஆனால் தற்போது பல பெண்கள் தாங்கள் விருப்பப்பட்ட தேதியில், விருப்பப்பட்ட நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, சிசேரியன் முறையை மேற்கொள்கின்றனர். ஆனால், இவ்வாறு செய்வது முற்றிலும் தவறான ஓன்று.

இதுகுறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் கூறுகையில், பெரும்பாலானோருக்கு அவர்கள் நினைத்த தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்துக் கொண்டிருக்கிறது. இது ஏற்கத்தக்கது அல்ல, நல்லதும் அல்ல. ஏன்னென்றால் சிசேரியன் மூலமாக குழந்தை பிறக்கும் போது தாய்க்கும் ஆபத்து. குழந்தைக்கும் ஆபத்து.

அந்த நேரத்தில் ஆபத்து ஏற்படாவிட்டாலும், எதிர்காலத்தில், அந்த குழந்தையின் வளர்ச்சியில் பெரிய அளவிலான ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடும். மேலும், அந்த குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் முறையில் பிரசவம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறக்கிறது. அதில் 61% பிரசவம் அரசு மருத்துவமனைகளில் தான் நடைபெறுகிறது என்றும், 100% சுக பிரசவத்திற்காக யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்