3 நாள் பயணமாக லடாக் சென்ற பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் 3 நாள் பயணமாக லடாக் சென்றுள்ளார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் 3 நாள் பயணமாக லடாக் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் லடாக் எல்லையில் உள்ள பி.ஆர்.ஓ எனப்படும் எல்லைச்சாலை கட்டமைப்பு நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் எல்லையோர கட்டமைப்பு பணிகளை ராஜ்நாத்சிங் தொடங்கி வைக்கிறார்.
மேலும்,லடாக் எல்லையில் நிலவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் அவர், ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் உரையாட உள்ளார்.
சீனாவுடன் லடாக் எல்லையில் பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் அங்கு பயணம் மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025