ஜி.பி.முத்து, பேபி சூர்யா, சிக்கா மற்றும் திருச்சி சாதனா மீது போலீசில் புகார்…!

Default Image

ஜி.பி.முத்து, பேபி சூர்யா, சிக்கா மற்றும் திருச்சி சாதனா மீது போலீசில் புகார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் சிறிய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் பொழுதுபோக்கும் பூங்காவாக தான் இணைய தளம் உள்ளது .

அந்த வகையில், ட்வீட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் பல செயலிகள் மூலமாக இணையத்தில் பல கச்சாரத்தை சீரழிக்கும் வண்ணம் பல வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட வீடியோக்கள் இன்றைய இளைய தலைமுறையினரை மிகவும் கவர்ந்து வருகிறது.பலரும் தாங்கள் ட்ரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காக ஆபாச பேச்சுக்களை பேசி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கீழக்கரை பகுதியை சேர்ந்த முஹைதீன் இப்ராஹிம் என்பவர் ஜி.பி.முத்து, பேபி சூர்யா, திருச்சி சாதனா போன்றோர் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வதாக முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் காவல்துறைக்கும் புகார் கொடுத்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில், ‘சமீப காலமாக வலைத்தளங்களில் ஆபாச பேச்சு வீடியோ பதிவுகள் அதிக அளவில் வலம் வருகிறது தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்காதலால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணையத்தில் அதிக நேரம் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி யூடியூப் பேஸ்புக் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அப்பாவி மாணவர்களை வழிகெடுத்து அவர்களை ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாத்திக்கும் நோக்கில் சிலர் 1. ஜி பி முத்து, 2. திருச்சி சாதனா, 3, பேபி சூர்யா, 4, சிக்கா என்ற சிக்கந்தர் மேலும் பலர் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர் .

இதனை இலட்சக்கணக்கானோர் காண்கின்றனர். இவர்களின் உடல் பாவனைகளும், பேச்சுக்களும் தமிழ்: நாட்டில் கலாச்சாரம் மற்றும் சமூக சீரழிவை ஏற்படுத்தும், குறிப்பாக இதை காணும் சிறுவர் சிறுமிகளின் மனதை பாதிப்படைய செய்யும் வகையில் ஆபாச பதிவுகள் உள்ளது. இளைய சமுதாயத்தை பாதிக்கும் இத்தகைய இணையதளங்களை கண்டறிந்து அவற்றை தடை செய்ய வேண்டும், மாணவர்கள் மத்தியில் விஷத்தை பரப்பும் கொடிய உள்ளம் கொண்ட ஆபாச பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இது போன்ற பதிவுகள் மேலும் தொடராமல் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்