#Breaking:ஒலிம்பிக்கில் பதக்கம் பெரும் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத்தொகை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

Default Image

ஒலிம்பிக்கில் பதக்கம் பெரும் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கடந்த இரண்டு மாதங்களாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி நிலையில்,தற்போது குறைந்து வருகிறது.எனினும்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக,கொரோனா பரவலை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் அமைத்து,18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை நேரு விளையாட்டரங்கில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

அந்த உரையில் முதல்வர் கூறியதாவது:”விளையாட்டு போட்டிகளுக்கு டீம் ஸ்பிரிட் மிக முக்கியமாக கருதப்படுகிறது.ஏனெனில்,வீரர்கள் ஒரே நோக்கில் இருந்தால்தான் முழு வெற்றியை பெற முடியும்.விளையாட்டு துறைக்கு அரசு என்றுமே துணை நிற்கும்.”,என்றார்.

இதனைத் தொடர்ந்து,ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி,வெள்ளிப்பதக்கம் வென்றால் ரூ.2 கோடி,வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்”,என்று அறிவித்துள்ளார்.

இதனையடுத்து,முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 6 வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Priyanka Gandhi
[File Image]
hemant soren udhayanidhi stalin
madurai - bridge
rian tn.
rain tn