#Breaking: டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி இல்லை -தமிழக அரசு…!
கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து தமிழக அரசு அறிவிப்பில் இடம் பெறவில்லை.
தமிழகத்தில் உள்ள நோய்த் தொற்று பரவலின் அடிப்படையில் மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ள ஊரடங்கு 28-6-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில்,தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கை வருகின்ற ஜூலை 5 ஆம் தேதி காலை 6-00 மணி வரை,நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும்,டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து தமிழக அரசின் அறிவிப்பில் இடம் பெறவில்லை.
இதனால்,11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
11 மாவட்டங்கள்:
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை.