பிலிப்பைன்ஸ் நாட்டில் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி..!

பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றையே ஆதாரமாக கொண்டுள்ளது. அந்த வகையில், தீவிரமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியிலும் உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றது. அந்த வகையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் அவசரகால ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அந்நாட்டு அதிபர், கொரோனா தடுப்பூசி செலுத்தாத மக்களை கைது செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். தற்போது அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும், கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்துவதற்கான பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025