முகத்தில் உள்ள கரும்புள்ளி நீங்க என்ன செய்ய வேண்டும்? இயற்கை முறை அறியலாம் வாருங்கள்!
முகம் பளபளப்பாக பருக்களின்றி அழகாக இருக்க வண்டும் என ஆண்கள் பெண்கள் இருவருமே விரும்புவது வழக்கம். ஆனால், சில சமயங்களில் முகத்தில் ஏற்படக்கூடிய பருக்கள் காரணமாக முகம் பொலிவிழந்து நாளடைவில் பருக்கள் அடையாளமான கரும்புள்ளிகளாக மாறிவிடுகிறது. ஆனால் இந்த கரும்புள்ளியை எப்படி இறக்கை முறையில் போக்குவது என்று பலருக்கும் தெரியவில்லை. இவற்றை எப்படி போக்குவது என்பது குறித்து இன்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குவதற்கு முதலில் கடலை மாவு மற்றும் தயிர் ஆகிய இரண்டு இருந்தாலே போதும். இந்த இரண்டையும் நன்றாக கலந்து இரண்டு நிமிடம் வைத்து விட்டு நமது முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும். அதன் பின்பு முகத்தை கழுவி விட முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அனைத்தும் ஒரு வாரத்தில் நிச்சயம் மறைந்து விடும். செயற்கையான கிரீம்களை உபயோகிப்பதை விட இயற்கையான முறையை முயற்சி செய்து பாருங்கள்.
அடுத்ததாக உருளைக்கிழங்கை நறுக்கி அவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் சாறை எடுத்து அதனுடன் கடலை மாவை கலந்து அல்லது தக்காளி சாறு கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் நீங்கும். மேலும் 3 டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் லவங்க பட்டை தூளை நன்றாக கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் நீங்கும்.