ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி: நடிகை நிவேதாபெத்துராஜ் புகார்

Default Image

டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி உணவகம் மீது நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அந்த படத்தை டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது சில திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் ஸ்விகி செயலி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் தேவையான சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார். அப்போது அங்கிருந்து டெலிவரி செய்யப்பட்ட உணவில், கரப்பான்பூச்சி இருந்ததாகவும் புகார் தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கான புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.

கரப்பான் பூச்சியுடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல்முறையல்ல என்றும் குறிப்பிட்ட உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை நிவேதா பெத்துராஜ் வலியுறுத்தியிருந்தார்.

நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்த புகாரில் உணவு சப்ளை செய்த மூன்லைட் ஓட்டல் செயல்படுவதற்கு தற்காலிகமாக தடை விதித்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். 6 மணி நேரத்தில் அடுத்தடுத்து உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், ஓட்டலில் 10 கிலோ பழைய இறைச்சியை பறிமுதல் செய்து அழித்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். மேலும்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்