குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டுமே தவிர, வண்டியால் குதிரையை இழுக்க முடியாது – ப.சிதம்பரம்

காங்கிரஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கட்சிகள் மற்றும் தலைவர்கள் முதலில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்.
ஜம்மு காஷ்மீரில், டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இந்நிலையில், இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் மோடி தலைமையில், டெல்லியில் அவரது இல்லத்தில் வைத்து, மோடி இல்லத்தில் ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடனான அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்குமாறு தலைவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், காங்கிரஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கட்சிகள் மற்றும் தலைவர்கள் முதலில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும், பின்னர் தேர்தல்களை நடத்த விரும்புகிறார்கள்.
ஆனால், மத்திய அரசின் பதில் முதலில் தேர்தல் மற்றும் பின்னர் மாநிலம் என்று கூறுகிறது. ஜம்மு காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்கி அதன் பிறகு தேர்தல் நடத்த வேண்டும். குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டுமே தவிர, வண்டியால் குதிரையை இழுக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.
The horse pulls the cart. A state must conduct elections. Only such elections will be free and fair.
Why does the government want the cart in front and the horse behind? It is bizarre.
— P. Chidambaram (@PChidambaram_IN) June 25, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025