ட்விட்டர் இந்தியா நிர்வாகியை கைது செய்ய தடை- கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி..!

Default Image

ட்விட்டர் இந்தியா நிறுவன இயக்குனர் மனீஷ் மகேஷ்வரியை கைது செய்ய தடை விதித்தது. காணொளி மூலம் விசாரணை நடத்த கர்நாடக உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

உத்தரபிரதேசத்தில் காசியாபாத்தில் கடந்த 5-ம் தேதி இஸ்லாமிய மதத்தை சார்ந்த ஒரு முதியவர் 5-க்கும் மேற்பட்டோர் தாக்கினர். இந்த வீடியோ டுவிட்டரில் வைரலானது. அந்த முதியவரை தாக்கிய நபர்கள் அவரை “ஜெய் ஸ்ரீ ராம்” என கூறச்சொல்லி வற்புறுத்தியதாகவும் அவர் கூற மறுத்ததால் அந்த முதியவரின்  தாடியை மழித்ததாக தகவல் வெளியானது.

ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில் அந்த முதியவர் மதரீதியாக தாக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால், அந்த வீடியோ மத ரீதியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் உள்ளதாகவும், போலியான கருத்துக்கள் பரப்பப்படுவதாக வீடீயோவை உடனே நீக்க வேண்டும் என மத்திய, மாநில அரசு டுவிட்டரிடம் தெரிவித்தது.

ஆனால், அந்த வீடியோவை டுவிட்டர் நீக்கவில்லை. இதனால், டுவிட்டர் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்குத்தொடர்பாக இன்று நேரில் ஆஜராக “டுவிட்டர் இந்தியா” நிறுவன இயக்குனர் மனீஷ் மகேஷ்வரிக்கு உத்திரபிரதேச போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில் , உத்தரப்பிரதேச காவல்துறை நோட்டிஸ் எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனீஷ் மகேஷ்வரி வழக்கு தொடர்ந்தார். அதில் முதலில் தன்னை  சாட்சியாக குறிப்பிட்ட காவல்துறை பின்னர் குற்றவாளியான மாற்றியதாக அவர் தெரிவித்தார். மேலும் காணொளி மூலமாக விசாரணைக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மனீஷ் மகேஷ்வரியை கைது செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் காணொளி மூலம் விசாரணை நடத்த உத்தரப்பிரதேச காவல்துறைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்