தோனி அப்படி !விராட் இப்படி!ஆனா ரெண்டு பெரும் எப்பவுமே அதுல டாப் தான்!புகழ்ந்து தள்ளிய இந்திய உலக கோப்பை அணியின் பயிற்சியாளர்!
முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் ஆலோசகருமான கேரி கிர்ஸ்டென் , விராட் கோலியும், தோனியும் சிறந்த கேப்டன்களுக்கான உதாரணமாக திகழ்கிறார்கள் என்றுதெரிவித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் பேட்டிங் ஆலோசகராக இருப்பவர் கேரி கிர்ஸ்டென். இவர் இந்திய அணியின் கேப்டனும் பெங்களுரு அணியின் கேப்டனுமான விராட் கோலி குறித்து கூறியதாவது:
விராட் கோலி நிலையான ஆட்டத்தை தருவதற்கு பல முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறார். அவர் அணியின் இக்காட்டான நிலையிலும் தடுமாறாமல் இருக்கிறார். இதுதான் கிரிக்கெட் வீரராக அடுத்தக்கட்டம். விராட் கோலியை பார்த்து இளைஞர்கள் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
தோனி, கோலி இருவரும் சிறந்த தலைவர்களுக்கான உதாரணங்களாக இருக்கிறார்கள். விராட் தனது கேப்டனுக்கான பொறுப்பை ஒவ்வொரு நகர்த்தலிலும் காட்ட நினைக்கிறார்.
தோனியை பொறுத்தவரை கடினமான நேரங்களில் அமைதியாக, கூல் கேப்டனாக பிரச்னையை முடிக்கிறார். அவர்கள் இருவரிடமும் இருக்கும் சிறப்பு, எந்த கடினமான சூழ்நிலையிலும் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.