#BREAKING: தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது..!
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
தமிழக 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையாற்றி தொடங்கி வைத்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, கடந்த 3 நாட்களாக சட்டசபையில் நடந்த விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலளித்தார். பின்னர், தேதி குறிப்பிடாமல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
ஆளுநர் உரையில் இடம்பெற்ற திட்டங்கள் தொடர்பாகவும், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.