பாப் இசை உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்சன் இறந்த தினம் இன்று!

Default Image

இருபதாம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கலைஞர்களில் ஒருவரான பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் இறந்த தினம் வரலாற்றில் இன்று.

1958 ஆம் ஆண்டு ஆகஸ்டு 29 ஆம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் மற்றும் கேதரின் எஸ்தர் என்ற தம்பதிக்கு ஏழாவது மகனாக பிறந்தவர் தான் மைக்கேல் ஜாக்சன். இவருக்கு உடன்பிறந்தவர்கள் எட்டு பேர் உள்ளனர். இரும்பு தொழிற்சாலையில் கிரேன் இயக்குனராக இருந்த இவரது தந்தை ஜோசப் ஒரு இசைக் கலைஞனாக இருந்துள்ளார். இந்நிலையில் காலப்போக்கில் மைக்கேல் ஜாக்சனும் இசையில் அதிகளவில் நாட்டம் கொண்டு ஜாக்சன் 5 எனும் குழுவில் இணைந்துள்ளார். அதன் பின் டயானா ராஸ் எனும் புகழ் பெற்ற பாடகி அப்பல்லோ அரங்கில் ஜாக்சனின் பாட்டு தொகுப்பை முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.

இதனை அடுத்து டயானா ராஸுடன் இணைந்து மைக்கேல் ஜாக்சன் பாட ஆரம்பித்துள்ளார். அதன் பின்பதாகவே இவர் புகழ்பெற்ற பாப் இசை பாடகர் ஆகியுள்ளார். பின் 1996 ஆம் ஆண்டு பிரஸ்லி எனும் பெண்ணை திருமணம் செய்த மைக்கேல் ஜாக்சன் 1999 இல் டெபோரா எனும் பெண்ணையும் திருமணம் செய்துள்ளார். மைக்கேல் ஜாக்சன்மைக்கேல் ஜாக்சனுக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். இதன் பின்பும் இவர் பல பாடல் தொகுப்புகள் வெளியிட்டு மேலும் பிரபலமடைந்தார். ஆனால்,  இவர் ஆப்ரிக்காவை சேர்ந்தவர் என்பதால் சற்று கருப்பு நிறத்துடன் காணப்பட்டுள்ளார்.

எனவே அந்நேரத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி என்பது சற்று பிரபலமாக பேசப்பட்டதால்  தனது முகத்தையும் அமைப்பையும் பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என விரும்பிய மைக்கேல் ஜாக்சன் தன் விரும்பியபடியே தனது முகத்தை மாற்றி அமைத்துக் கொண்டார். தொடர்ந்து இவர் மேலும் மேலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டே இருந்த காரணத்தால் இவரது முகம் சிதைய  ஆரம்பித்து சரும நோய்கள் ஏற்பட தொடங்கி உள்ளது. அதனை எடுத்து ஆங்காங்கே அவரது முகத்தில் உள்ள பிளாஸ்டிக் சர்ஜரி பேண்டேஜ் போல உரிய தொடங்கியுள்ளது. ஆனால் இதற்கு காரணம் இந்த பிளாஸ்டிக் சர்ஜரி அல்ல ஜாக்சனுக்கு இருந்த ஒரு நோய்தான் என தற்பொழுத கூறப்படுகிறது.

இருப்பினும் உண்மை என்ன என்பது தெரியவில்லை. ஆனால், தனக்கு ஒரு பிரச்சினை இருப்பதாக ஏற்கனவே 1803 ஆம் ஆண்டு வெளிப்படையாக ஜாக்சன் கூறியிருந்த நிலையில் அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளிக்கும் போது சில சமயம் நம்மால் சிலவற்றை மாற்ற முடியாது, அதற்காக உதவி பெறவும் முடியாது. உண்மை அறியாமல் மக்கள் எழுதும் கட்டுரைகள் என்னை மிகவும் புண்படுத்தி உள்ளது. இது எனக்கு இருக்கும் பிரச்சினையை விட கட்டுப்படுத்த முடியாத பிரச்சனையாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இறுதியாக இவர் 2009ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் வெண் புள்ளிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இவரது இறப்பிற்கான காரணம் என்ன என்று தற்பொழுது வரை அறிவிக்கப்படாத ஒன்றாகவே இருக்கிறது. எப்படி ஆயினும் தனது வாழ்க்கையின் குறிக்கோளை நிறைவேற்றி உலகின் மிகச் சிறந்த பாடகர் எனும் பெயர் பெற்ற மைக்கேல் ஜாக்சன் அவர்கள் மறைந்த தினம் வரலாற்றில் இன்று.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
TN Assembly
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP