#Breaking:இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று மாலை 6 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி தொடங்கியது.இந்த கூட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையாற்றி தொடங்கி வைத்தார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.அதனை தொடர்ந்து, இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
அப்போது பேசிய முதல்வர்,அதிமுக ஆட்சியில் அற வழியில் போராடியவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள்,உள்ளிட்டவற்றை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.மேலும்,22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க 2 பெரும் தொழிற்சாலைகள்
இதனைத் தொடர்ந்து,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாத கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில்,முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில்,இன்று மாலை 6 மணியளவில் 2-வது முறையாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி,கொரோனா கட்டுப்பாடு,கொரோனா 3 வது அலை உள்ளிட்ட சில முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.