#BREAKING: மீத்தேன், 8 வழிச்சாலை வழக்குகள் வாபஸ் -முதல்வர் அறிவிப்பு..!
மீத்தேன், 8 வழிச்சாலை, குடியுரிமை சட்டத்திற்காக அறவழியில் போராடிய பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவையின் இறுதி நாளான இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பதில் உரை வழங்கி வருகிறார்.
அப்போது, பேசிய முதல்வர், மீத்தேன், 8 வழிச்சாலை, குடியுரிமை சட்டத்திற்காக அறவழியில் போராடிய பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறப்படும் என்று அறிவித்தார். மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என அறிவித்தார்.
தமிழகத்தில் உள்ள சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும், புதிதாக சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார்.