உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நியூஸிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்கு..!

2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 73 ஓவரில் 10 விக்கெட்டை இழந்தது 170 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்தில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் 4-ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2-ஆம் போட்டி தொடங்கியது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் எடுத்தனர். வழக்கமாக இந்திய நேரப்படி 3 மணிக்கு தொங்கும் போட்டி நேற்று 5-வது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு தொடங்கியது.
5-ஆம் நாள் போட்டி தொடங்கும்போது நியூசிலாந்து 2 விக்கெட்டை இழந்து 101 ரன்கள் எடுத்த நிலையில், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சிஸை மீண்டும் தொடங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சில் நியூசிலாந்து சற்று தடுமாற்றத்துடன் விளையாடியது. இறுதியாக 99.2 ஓவரில் நியூசிலாந்து அணி 249 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்திய அணியில் ஷமி 4 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் பறித்தனர். இதனால், நியூஸிலாந்து அணி 32 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி நேற்று தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக சுப்மான் கில், ரோஹித் இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் 81 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். தொடக்க இருவரும் டிம் சவுதிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
5 -ஆம் ஆட்ட முடிவில் இந்திய அணி 30 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 64 ரன்கள் எடுத்தனர். களத்தில் புஜாரா 12 மற்றும் கோலி 8 ரன்களுடன் இருவரும் இருந்தனர். இதைத்தொடர்ந்து, இன்று 6-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கோலி 13 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் மத்தியில் களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 41 ரன்கள் குவித்தார்.
நியூசிலாந்து அணி வீரர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். இதனால், இந்திய அணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியாக இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 73 ஓவரில் 10 விக்கெட்டை இழந்தது 170 ரன்கள் எடுத்தனர். இதனால், நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியில் டிம் சவுதி 4 விக்கெட்டும், ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டும் , கைல் ஜேமீசன் 2 விக்கெட்டும் பறித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025