கச்சா எண்ணெய் விலை உயர்வு தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் – பெட்ரோலியத்துறை மந்திரி!
கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தற்போது மிக அதிக அளவில் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது தான் இதற்கு காரணம் என பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்கள் விளக்கமளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய் விலை உயர்வு தான் எனவும் 80 சதவீத எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால் பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கோரியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்களை திருப்பி செலுத்த தவறிவிட்டதாகவும் பொருளாதார வல்லுனர்கள் ஒரு கருத்தை முன் வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாம் இப்போது அதன் வட்டி மற்றும் முதலை சேர்த்து செலுத்த வேண்டி உள்ளதாகவும், இதுவும் எரிபொருட்களின் விலை உயர்வுக்கு ஒரு பெரிய காரணமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.