#BREAKING: 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் -முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

Default Image

குடியுரிமை திருத்தச் சட்டம், மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானத்ம் நிறைவேற்றப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் 3 வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்