நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஏலக்காய் டீ…!

Default Image

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஏலக்காய் டீ.

ஏலக்காய் நறுமணப் பொருட்களில் ஒன்றாகும். இது வாசனைக்காக பயன்படுத்தப்பட்டாலும், இதில் பலவிதமான சத்துக்கள் காணப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ, பி, சி போன்ற சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. தற்போது இந்த பதிவில் ஏலக்காய் டீ அடிக்கடி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் என்பது பற்றி பார்ப்போம்.

ஏலக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக காணப்படுவதால், இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் நெஞ்சில் சளி பிரச்சனை உள்ளவர்கள், மூச்சு விடுவதற்கு சிரமப்படுபவர்கள், சளி, இருமல் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் ஏலக்காய் டீயை குடித்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிப்பதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம் பிரச்சனைகளில் இருந்து விடுதலை ஆக்குகிறது. மேலும் தலைவலி பிரச்சினை உள்ளவர்கள், இந்த டீயை குடித்து வந்தால் தலைவலி விரைவில் குணமடையும்.

stomach painசெரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடித்தால் செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளையும் போக்குகிறது.

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் பட்சத்தில், எந்த ஒரு தொற்று நோயாக இருந்தாலும் எளிதில் நம்மை தாக்கி விடும். எனவே இப்படிப்பட்ட பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, ஏலக்காய் டீ மிகவும் உதவுகிறது. ஏலக்காய் டீயை தொடர்ந்து குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை நமது உடலில் அதிகரிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்