விஜய் சேதுபதியின் அடுத்த பட மாஸ் தகவல்- நாயகி மற்றும் இசையமைப்பாளர் இவர்களா ?
சினிமா ஸ்ட்ரைக் முடிந்ததில் இருந்து பிரபலங்கள் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாக ஆரம்பித்துவிட்டனர். தற்போது விஜய் சேதுபதியின் புதிய படம் குறித்த தகவல் வந்துள்ளது. K புரொடக்ஷன்ஸ் மற்றும் YSR பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் தான் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறாராம்.
சேதுபதி பட புகழ் அருண்குமார் இப்படத்தை இயக்க அஞ்சலி நாயகியாக நடிக்க இருக்கிறார். படத்திற்கு யுவன் இசையமைக்க, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக கமிட்டாகியுள்ளார்.
சென்னையில் ஏப்ரல் 21ம் தேதி ஆரம்பிக்கும் இப்பட படப்பிடிப்பு தென்காசி, மலேசியா போன்ற இடங்களிலும் படமாக்கப்பட இருப்பதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.
இந்த தகவலை அஞ்சலியே புகைப்படங்கள் மூலம் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.