நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன் வடிவு கொண்டு வரப்படும் – ஆளுநர்!
நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன் வடிவு கொண்டு வரப்படும் என இன்று நடைபெறும் சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 16 வது புதிய சட்டப் பேரவையின் முதல் கூட்டம் இன்று அண்ணா கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது.
இந்த சட்டப் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் உரையாற்றுகிறார். அதில் பேசிய அவர் ” நீட் தேர்வில் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க தேவையான சட்டங்களை நிறைவேற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.