கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க யோகா பயிற்சி உதவும் – மத்திய சுகாதாரத்துறை மந்திரி!
கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு யோகா பயிற்சி உதவும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்த்தன் அவர்கள் கூறியுள்ளார்.
ஜூன் 21 ஆம் தேதியான இன்று உலகம் முழுவதிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாகத் தற்பொழுது ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால். இந்த முறை மிக எளிமையாக சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருவதுகிறது. இதனை அடுத்து டெல்லியில் உள்ள அஷ்டபதி பவனில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் யோகாவில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பல்வேறு மந்திரிகள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என பலரும் இந்த யோகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் அவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கொரோனா காலத்தில் யோகா தொடர்புடைய விஷயங்கள் அதிகமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், நம்முடைய உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த சுகாதார விஷயங்களை பராமரிக்க உதவும் யோகா உடற்பயிற்சிகளை அன்றாட வாழ்வில் நாம் ஒரு பகுதியாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், கொரோனா வைரஸ்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலில் அதிகரிப்பதற்கு யோகப்பயிற்சி அதிக அளவில் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.