#BREAKING : கொரோனா பரவல் குறைந்துள்ள 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க அனுமதி…!
கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 4 மாவட்டங்களில், நகரப்பேருந்துகள் மட்டும் இயங்க அனுமதி.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் கடந்த ஜூன் 14ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், தற்போது புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.