மீண்டும் கைவரிசையை காட்டும் ஜோக்கர் வைரஸ்…! கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 8 செயலிகள் நீக்கம்…!

Default Image

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 8 செயலிகளை நீக்கிய கூகுள் நிறுவனம்.

இன்று பல புதிய செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிற நிலையில், பல செயலிகள், நமக்கு நன்மை பயக்குவதாக காணப்பட்டாலும், சில செயலிகள் நமக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயலிகளாக தான் காணப்படுகிறது. எனவே நாம்  செயலிகளை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும்.

சில செயலிகளை பயன்படுத்துவதின் மூலம் நமது எஸ்எம்எஸ், ஓடிபி மற்றும் அழைப்புகள் போன்றவற்றை திருடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் அவ்வப்போது தீங்கிழைக்கக் கூடிய செயலிகளை கண்டறிந்து நீக்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஜோக்கர் வைரஸ் தனது தாக்குதல்களை நடத்தி வந்த  நிலையில், தற்போது மீண்டும் தனது கைவரிசையை காட்டி உள்ளது.

அண்மையில் வெளிவந்த தகவலின் அடிப்படையில், Quick Heal பாதுகாப்பு ஆய்வகங்களின் ஆராய்ச்சியாளர்கள், கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் 8 ஜோக்கர் வைரஸ் தாக்கப்பட்ட புதிய செயலிகளை கண்டறிந்துள்ளனர். இந்த ஜோக்கர் வைரஸானது,  Auxiliary Message, Fast magic SMS, Free CamScanner, Super Message, Element Scanner, Go messages, travel wallpapers மற்றும்  Super SMS ஆகிய செயலிகளில் தனது தாக்குதலை நடத்தியுள்ளது.

ஜோக்கர் வைரஸ் தனது மீண்டும் தனது கைவரிசையை காட்ட தொடங்கியுள்ள நிலையில், இந்த வைரஸ் தாக்கப்பட்ட 8 செயலிகளையும், கூகுள் நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.  மேலே குறிப்பிடப்பட்டுள்ள 8 செயலிகளை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், உடனடியாக உங்கள் மொபைலில் இருந்து இந்த செயலிகளை அழித்து விடுங்கள். இந்த வைரஸ் பயனர்களின் எஸ்எம்எஸ், ஓடிபி மற்றும் அழைப்புகள் போன்றவற்றை திருடுவதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
sprouted green gram (1)
Srilanka Minister Chandrasekaran say about Tamilnadu Fisherman issue
govi. chezhian about anna university issue
eps about anna university issue
ViratKohli
annamalai BJP