‘பிரேமம்’ பட இயக்குநரின் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன்..!!
பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.
இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தசாவதாரம். இந்த திரைப்படம் வெளியாகி 13 வருடங்கள் ஆனதால் நடிகர் கமல்ஹாசன் தனது முக நூல் பக்கத்தில் நெகிழிச்சியுடன் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து பிரேமம் படம் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவின் கீழ் “தசாவதாரம் திரைபடம் பிஹெச்டி போன்றது என்றால், மைக்கேல் மதன காமராஜன்டிகிரி கோர்ஸ் போன்றது. மைக்கேல் மதன காமராஜன் படத்தின் காட்சிகளை எப்படி எடுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா”..?? என்று கமலிடம் கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன் “நன்றி அல்ஃபோன்ஸ் புத்திரன். விரைவில் நான் சொல்கிறேன். நான் கூறுவது உங்களிற்கு எந்த அளவுக்கு கற்றுக்கொள்ள உதவும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் சொன்ன மாதிரி அது ஒரு மாஸ்டர் கிளாஸ். படம் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் கழித்தும் இதுகுறித்துப் பேசுவது எனக்கு புதிய பாடங்களை கற்றுக் கொடுக்கிறது” என்று பதிலளித்துள்ளார்.