‘தம்பி வா…! தலைமை ஏற்க வா…!’ – முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜய்…! திண்டுக்கல்லில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்….!
திண்டுக்கல்லில் விஜய் ரசிகர் ஒட்டியுள்ள போஸ்டரில், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன்,நடிகர் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் தளபதி விஜய் அவர்களும் ஒருவர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அவர் இயக்குனர் நெல்சன் அவர்களது இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 65வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே அவர்கள் நடித்து வருகிறார்.
இந்நிலையில் வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி விஜய் தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக திண்டுக்கல்லில் விஜய் ரசிகர் ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன்,நடிகர் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
மேலும், அந்த போஸ்டரில் ஏழை எளிய மாக்களுக்கு நல்லாட்சியை வழங்கிட ‘தம்பி வா…! தலைமை ஏற்க வா…!’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.