இலங்கைக்கு 740 கோடி கடன் வழங்கிய இந்தியா – எதற்காக தெரியுமா?

Default Image

இலங்கையில் சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இந்தியா 740 கோடி ரூபாய் கடனாக வழங்கியுள்ளது.

இலங்கை அரசு 2030- ஆம் ஆண்டுக்குள் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் 70 சதவீதத்தை மரபுசாரா மூலங்கள் வழியாக உற்பத்தி செய்வதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடையும் விதமாக சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி இலங்கைக்கு சுமார் 740 கோடி கடன் உதவியாக வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் புதன்கிழமை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அவர்கள் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பல்வேறு துறைகளில் நிலவி வரக்கூடிய ஒத்துழைப்பை வளப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளதாகவும், 2018 ஆம் ஆண்டு இந்தியா முன்னின்று உருவாக்கிய சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பில் இலங்கையும் உறுப்பு நாடாக உள்ளதால், மற்ற நாடுகளில் சூரிய எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான உதவிகள் வழங்கப்படும் என இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டதாகவும் இந்த வகையில் தான் தற்பொழுது இலங்கைக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளின் மேல் இந்த சூரிய ஒளி தகடுகளை அமைத்து சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளுக்காக தான் இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவும் இலங்கையும் இணைந்து சூரிய எரிசக்தி உற்பத்தியில் பயணித்து வருவதாகவும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்