கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா…? முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

Default Image

இன்று ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த  நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வரும் 21-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் வழங்குவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார்.

பொது போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்டதளர்வுகள் குறித்து இந்த ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்