#BREAKING: சிவசங்கர் பாபா அறைக்கு சீல் வைப்பு..!
சுஷில் ஹரி பள்ளியில் 1 மணி நேரம் சோதனை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவின் அறைக்கு சீல் வைத்தனர்.
சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
நேற்று சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிறையிலுள்ள சிவசங்கர் பாபாவை முதற்கட்டமாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதற்கான மனுவை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்நிலையில், பாலியல் புகார் அளித்த மாணவிகள் சிவசங்கர் பாபா அவருடைய அறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் என்ற ஒரு வாக்கு மூலம் அளிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, நேற்று சிவசங்கர் பாபா நேரடியாக தனது அறையை அடையாளம் காட்டினார். இந்நிலையில், இன்று காலை சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா அறையை சோதனை செய்து பின்னர் அறைக்கு சீல் வைத்தனர். சிவசங்கர் பாபா அறையிலிருந்த கணினி ஹார்ட் டிஸ்க்குகளை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
சிவசங்கர் பாப்பாவுக்கு உடந்தையாக இருந்த பெண் பக்தர்கள் சுஷ்மிதா, நீராஜ் கருணாவிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.