இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.113 கோடி நிதியுதவி வழங்கிய கூகுள்…!

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள், இந்தியாவுக்கு ரூ.113 கோடி ரூபாய் நிதி உதவி செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது சில  மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ,பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.

மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிறுவனங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள், இந்தியாவுக்கு ரூ.113 கோடி ரூபாய் நிதி உதவி செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இரண்டு மழையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவும் வகையில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகளை உருவாக்குவதற்கும், சுகாதார பணிகளுக்காகவும் ரூ.113 கோடியே கூகுள் நிறுவனம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த செயலுக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கூகுள் நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் ரூ.135 கோடி நிதியுதவி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.