கொச்சிக்கு அருகில் நீருக்கடியில் ஒரு தீவு?- கூகுள் மேப்பில் தென்பட்ட வடிவம்…!

Default Image

அரபிக் கடலில் கொச்சிக்கு அருகில் நீருக்கடியில் ஒரு ‘பீன்ஸ் வடிவ தீவு’ இருப்பது போன்று,கூகுள் மேப்பின் சேட்டிலைட் இமேஜில் தெரிய வந்துள்ளது.

அரபிக் கடலில்,கேரளாவின் கொச்சி கடற்கரைக்கு அருகில்,ஒரு பீன்ஸ் வடிவ ‘தீவு’ போன்ற அமைப்பு இருப்பது போல கூகுள் மேப்பின் சாட்டிலைட் இமேஜில் தெரிய வந்துள்ளது.

அதாவது,கொச்சி கடற்கரையிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த தீவானது,வானில் இருந்து பார்ப்பதற்கு ஒரு பீன்ஸ் போன்ற அமைப்பில் உள்ளது.இந்த தீவு சுமார் 8 கிலோ மீட்டர் நீளமும், 3.5 கிலோ மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.

இதனையடுத்து,இந்த படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது நெட்டிசன்களை குழப்பிவிட்டதால் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும்,கேரள மீன்வளம் மற்றும் கடல் ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் வல்லுனர்கள் குழு இது குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து,பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ரிஜி ஜான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:”கூகிள் வரைபடத்தைப் பார்க்கும்போது, ​​இது உலகெங்கிலும் நாம் காணும் நீருக்கடியில் உள்ள தீவைப் போலவும் தோன்றுகிறது.ஆனால்,அது என்ன என்று எங்களுக்குத் தெரியாது- அது,தானாக உருவாகிய மணல் அல்லது களிமண் திட்டு போன்று இருக்கலாம்.

மேலும்,கொச்சியில் உள்ள துறைமுகத்தில் அகழ்வாராய்ச்சி செய்வது குறித்து மாநிலத்தின் கடற்கரையோர மீனவர்கள் புகார் அளித்துள்ளனர் இருப்பினும்,இதை கண்டறிய இன்னும் பல தகவல்கள் தேவைப்படுகின்றன.

அதுமட்டுமல்லாமல்,பொதுவாக, நீருக்கடியில் ஏற்படும் மின்னோட்டம் காரணமாக,கடற்கரையின் திரட்டுதல் அல்லது அரிப்பு போன்ற செயல்முறைகள் காணப்படுகின்றன.எனவே,இது மாநிலத்தின் தெற்கு பகுதியில் நிகழும் ஒரு பொதுவான நிகழ்வாக இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்