#Breaking:முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படை..!

Default Image

பாலியல் வழக்கில் தலைமறைவாகி உள்ள,முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படை போலீசார்,மதுரைக்கு விரைந்துள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி தெரிவித்தார்.

மேலும், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து சொன்னதாகவும் இதனால், முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவே தன்னையும், தனது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த  மனுவில், நடிகை சாந்தினி பணம் பறிக்கும் நோக்கத்தில் தன் மீது  அளித்ததாகவும், அவர் மலேசியாவில் இதுபோல் மோசடி செய்ததாகவும், மருத்துவ உதவிக்காக தான் கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி கேட்டதால் தன்னை மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்தார்.

இதன்காரணமாக,சென்னை உயர்நீதிமன்றம்,முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு,முன்ஜாமீன் வழங்க மறுத்தது.

இந்நிலையில்,முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மதுரையில் தலைமறைவாகி இருப்பதாக வந்த தகவலையடுத்து,2 தனிப்படை போலீசார்,மதுரைக்கு விரைந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்