IPL 2018:ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றி !புள்ளிகள் பட்டியலில் டாப்க்கு சென்றது சென்னை அணி!
சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று ஹைதராபாத்தில் நடைபெறும் 20வது ஆட்டத்தில் மோதியது.
பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் அடித்தது.சென்னை அணியின் பேட்டிங்கில் அதிக பட்சமாக அம்பதி ரயுடா 78,சுரேஷ் ரெய்னா 54,தோனி 25 ரன்களும் அடித்தனர்.ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் புவனேஸ்வர்,ரசித் கான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் மட்டுமே அடித்தது.அதிகபட்சமாக வில்லியம்சன் 84,யூசுப் பதான் 45 ரன்கள் அடித்தனர்.சென்னை அணியின் பந்துவீச்சில் சாகர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.