10, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை இயக்கத் தடை – டெல்லி அரசு அறிவிப்பு.!
டெல்லியில் 10, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை இயக்கினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
டெல்லி மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களையோ இயக்கினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. மேலும் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பது ” 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களையோ, 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள் இயக்கினால் 10 ஆயிரம் ரூபாய் அபாரதத்துடன் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.