நாகலாந்தில் ஜூன் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு!
நாகலாந்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக அம்மாநில அரசு ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பெருமளவில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக விதிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆங்காங்கு உள்ள நிலைமைக்கேற்ப ஊரடங்கு தளர்வு விதிக்கப்பட்டு வருகின்றது.
அது போல நாகலாந்து மாநிலத்தில் ஏற்கனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது அம்மாநிலத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. எனவே மேலும் கொரோனா பரவாமல் தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து மாநில அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஜூன் 30-ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.