இந்தோனேசியாவின் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை..!
இந்தோனேசியாவில் நேற்று நிகழ்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நேற்று இந்தோனேசியாவின் வடக்கு மாலுகு தீவுப்பகுதியில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் விளைவுகள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
ஆனால், ஜூன் மாத தொடக்கத்தில் இந்த பகுதியில் 6 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்த மாலுகு தீவுப்பகுதியில் தற்போது சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன் காரணத்தால் இங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.