புஜாரா போன்ற வீரர்கள் மட்டுமே இப்படி விளையாட முடியும் – சச்சின் டெண்டுல்கர்..!!

Default Image

டெஸ்ட் போட்டியில் புஜாரா சிறந்த பேட்ஸ்மேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியில் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் செதேஷ்வர் புஜாரா. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புஜாரா17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 818 ரன்கள் குவித்துள்ளார். இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்து சௌதாம்ப்டான் மைதானத்தில் வருகின்ற ஜூன் 18 முதல் 22ஆம் தேதி வரை  நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்றக செதேஷ்வர் புஜாரா சிறப்பான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் புஜாராவின் பேட்டிங் குறித்து பேசியுள்ளார்.

புஜாரா பேட்டிங் குறித்து பேசிய சச்சின் கூறியது “புஜாரா இந்திய அணிக்காக செய்த சாதனைகள் பற்றி நாம் உண்மையில் பாராட்ட வேண்டும். ஒவ்வொரு பந்திலும் சிங்கள் ரொட்டேட் செய்யும் வீரர்கள், புஜாரா அளவுக்குத் திறமை வாய்ந்தவர்கள் எனச் சொல்லவிட முடியாது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை ஸ்ட்ரைக் ரேட் என்பது ஒரு பிரச்சினை இல்லை. டெஸ்ட் போட்டியில் புஜாரா சிறந்த பேட்ஸ்மேன்.

புஜாரா பேட்டிங் செய்யும் போது பந்து வீசும் பந்து வீச்சாளரைத் திணறடிக்க செய்கிறார். எதிர் அணியின் வீரர்களை சோர்வடைய செய்கிறார் புஜாரா போன்ற வீரர்கள் மட்டுமே இப்படி செய்ய முடியும். இப்பொது இருக்கும் காலகட்டத்தில் டி20 போட்டிகள் தான் அதிகம் பேசப்படுகிறது. சிக்ஸர் அடிக்கும் வீரர்கள் தான் சிறந்த பேட்ஸ்மன்கள் என்று கூறுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்