ஓபிஎஸ் ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால்…. சசிகலாவின் அடுத்த ஆடியோ வெளியீடு…!

ஓ பன்னீர்செல்வம் ராஜினாமா செய்திருக்காவிட்டால் அவரை தான் முதல்வராக தொடர்ந்து அமர வைத்து இருப்பேன் என சசிகலா அதிமுக நிர்வாகி சிவனேசனிடம் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பியுள்ள சசிகலா பெங்களூருவில் சென்னை திரும்பியதும், அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அரசிலிருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசக்கூடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.தற்போதும் தேனி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சிவநேசன் என்பவருடன் சசிகலா பேசக்கூடிய ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அதில் ஓ பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் அவரை தொடர்ந்து முதல்வராக அமர வைத்து இருப்பேன் என சசிகலா கூறியுள்ளார். மேலும் அழகர் சாமி எனும் அதிமுக நிர்வாகியிடம் பேசிய அவர், தான் அம்மாவைப் போல எப்பொழுதும் நியாயத்தின் பக்கம் தான் நிற்பேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு தொண்டர்கள் தான் முக்கியம் எனவும், விரைவில் தொண்டர்களை நேரில் சந்திப்பேன் எனவும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!
March 4, 2025
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025