டெல்லியில் நேற்றை விட அதிகரித்த கொரோனா பாதிப்பு..!

டெல்லியில் கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று அதிகரித்துள்ளது.
டெல்லியில் சில நாட்களாக கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. அங்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினாலும், தடுப்பு நடவடிக்கைகளாலும் கொரோனா பரவல் குறைந்துள்ளது. ஆனால், நேற்றை விட இன்று கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்துள்ளது. டெல்லியில் நேற்று 131 கொரோனா தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று டெல்லி அறிவித்துள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 228 கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,31,498 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12 உயிரிழந்துள்ளதாகவும், 364 பேர் குணமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 24,851 ஆகவும், இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 14,03,569 ஆகவும் அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் 3,078 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025