கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் செலுத்தும் திட்டத்தை நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்!
- கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் வங்கி கணக்கில் 5 லட்சம் வைப்பு நிதியாக வைக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
- இந்நிலையில், இந்த திட்டத்தை முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், பல குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அனாதைகளாக்கப்பட்டுள்ள நிலையில், குடும்பத்தினரின் ஆதரவு இழந்து தவிக்கின்றனர். இது போன்ற ஆதரவற்ற குழந்தைகள் காக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வலுத்து வந்த நிலையில் குழந்தைகளின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வாங்கி தொகையாக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், பெற்றோர்களில் யாரேனும் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் வாய்ப்பு தொகையாக வைக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. மேலும், அவர்களுக்கு 18 வயது நிறைவடையும் பொழுது அந்த தொகையை அந்த குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வு தலைமை செயலகத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.