“இறுதி மூச்சு வரை, நாட்டைப் பாதுகாத்த,வீரர்களின் அழியாத தியாகத்திற்கு,இந்த நாடு கடன்பட்டிருக்கும்” – முதல்வர் கெஜ்ரிவால்…!
கல்வான் பள்ளத்தாக்கின் முதலாம் ஆண்டு நினைவு குறித்து,டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,”இறுதி மூச்சு வரை, நாட்டைப் பாதுகாத்த,நமது வீரர்களின் அழியாத தியாகத்திற்கு இந்த நாடு என்றென்றும் கடன்பட்டிருக்கும்” என்று ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவுக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில்,கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி சீனப் படையினர் அத்துமீறி நுழைந்தனர். இதனால்,அவர்களை இந்திய வீரரர்கள் தடுத்து நிறுத்தியபோது,இருதரப்பு வீரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.
எனினும்,உயிரிழந்த சீன வீரர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப் பூர்வமாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.ஆனால்,40 க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளின் உளவுத் துறை தெரிவித்தது.
இந்நிலையில்,கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்து இன்றுடன் ஒரு வருடம் ஆனதை நினைவு கூறும் வகையில்,டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதல் நடைபெற்று இன்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.இறுதி மூச்சு வரை நாட்டைப் பாதுகாத்த நம் நாட்டின் துணிச்சலான வீரர்கள் அனைவரின் அழியாத தியாகத்திற்கு வணக்கம்.நமது வீரர்களின் அந்த அழியாத தியாகத்திற்கு இந்த நாடு என்றென்றும் கடன்பட்டிருக்கும்”,என்று கூறி பதிவிட்டுள்ளார்.
चीन के साथ गलवान घाटी में हुए संघर्ष को आज एक साल पूरा हो गया, देश के उन सभी वीर जवानों की अमर शहादत को सलाम जिन्होंने आखिरी सांस तक देश की रक्षा की। हमारे जवानों के उस अमर बलिदान का ये देश सदा ऋणी रहेगा। #GalwanValley
— Arvind Kejriwal (@ArvindKejriwal) June 15, 2021