ஆதார் அட்டை, குடை இருந்தால் மட்டுமே மதுபாட்டில்கள் வழங்கப்படும்…!
- திண்டுக்கலில் மதுக்கடையில் ஆதார் அட்டை மற்றும் குடை கொண்டு வருவோருக்கு மட்டுமே மது பாட்டில்கள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் ஜூன் 21-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும், சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாத காரணத்தால் உடுமலை, மடத்தக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள மதுக்கடைகளுக்கு வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல்லில் புறநகர் பகுதிகளில் ஆதார் அட்டை மற்றும் குடை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே மது பாட்டில்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இதனை அடுத்து குடையுடன் வரும் நபர்களுக்கு தனிமனித இடைவெளியை கடைபிடித்து, குறிப்பிட்ட அளவிலான மதுபாட்டில்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் புறநகர் பகுதியான ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள மதுக்கடையில் ஆதார் அட்டை மற்றும் குடை கொண்டு வருவோருக்கு மட்டுமே மது பாட்டில்கள் வழங்கப்படுகின்றன. மேலும் குடை மற்றும் ஆதார் அட்டை இல்லாதவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.