வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு..!

Default Image
  • வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை,எளியோர் கொரோனாவால் இறந்தால் அவரது குடும்பத்தினர்க்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று  கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.எனினும்,முன்னதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பலரும் இறந்துள்ளனர்.இதனால், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு வகையில் நிவாரணங்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில்,வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை,எளியோர்களில் வேலைக்கு செல்பவர்கள்,கொரோனாவால் இறந்தால் அவரது குடும்பத்தினர்க்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று  கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

மேலும்,சுமார் 25,000 முதல் 30,000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க மாநில நிதித்துறைக்கு கிட்டத்தட்ட ரூ.250 கோடி முதல் 300 கோடி வரை செலவாகும் என்றும் முதல்வர் கூறினார்.

கர்நாடகாவில்,நேற்று 7,810 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும்,125 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

rain news live
Chengalpattu
CM Stalin
tn school leave rain
Shiv sena Leader Eknath Shinde
rain tn update
Jasprit Bumrah