#BREAKING: எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு..!
எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 12 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டம் 3 மணி நேரம் நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தலைமை கழகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கழகத்தின் சார்பில் சட்டமன்ற கட்சியின் துணைத் தலைவர், பொருளாளர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளராக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பதவிகளுக்கு, கழக சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு செய்யபப்ட்டுள்ளார். கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும், துணைக் கொறடாவாக சு.ரவியும், பொருளாளராக கடம்பூர் ராஜு, செயலாளராக கே.பி அன்பழகன், துணைச் செயலாளராக P.H மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.