ஆதரவற்ற பெண் என ஏமாற்றி மறுமணம் செய்துவிட்டு, 6 லட்சம் பணத்துடன் தலைமறைவாகிய பெண்!
- ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள பெண் இளைஞனை ஏமாற்றி மறுமணம் செய்துள்ளார்.
- மேலும் அவர்களது வீட்டில் இருந்து ஆறு லட்சத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
திருப்பதி அருகே உள்ள நரபுராஜூ கண்டரீகா எனும் பகுதியை சேர்ந்தவர் தான் 29 வயதுடைய சுனில் குமார். மார்க்கெட்டிங் ஊழியராக பணியாற்றி வரக்கூடிய சுனில் குமார் கடந்த 5 ஆண்டுகளாக சத்யநாராயண புரத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் சுனில்குமாருக்கு தனியார் நிறுவனத்தில் பணியாற்ற கூடிய சுகாஷினி என்னும் பெண்ணுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாற சுஹாசினி தான் ஆதரவற்றவர் என்று கூறியதால், கடந்த டிசம்பர் மாதம் சுனில் குமார் சுஹாசினியை தனது வீட்டை ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அதன் பின் சுனில் குமாரின் குடும்பத்தினர் அந்தப் பெண்மணிக்கு 20 கிராம் தங்க சங்கிலி ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளனர். சில நாட்களுக்கு பின் அந்தப் பெண்மணி தன்னை சிறுவயதில் வளர்த்தவர்களுக்கு தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், அவர்களை பார்க்க செல்வதாகவும் கூறியுள்ளார். மேலும், அந்த பகுதியில் திருமணத்திற்கு முன்பு கடன் வாங்கியதாகவும் அதற்காக 6 லட்சம் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
குடும்பத்தினராக மாறிவிட்ட பெண்ணின் கடனை தீர்க்க வேண்டும் என்பதற்காக சுனில்குமார் குடும்பத்தினரும் 6 லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளனர்.ஆனால் அந்த பெண்மணி அதன் பின்பதாக ஒரேடியாக தலைமறைவாகி உள்ளார். இதனையடுத்து சுஹாசினியின் ஆதார் கார்டு மூலமாக விசாரித்ததில் அவர் நெல்லூரை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்து உள்ளது.
அதன் பின்பு ஒரு நாள் சுஹாசினி சுனில்குமார் தொடர்பு கொண்டு தான் ஹைதராபாத்தில் இருப்பதாகவும், விரைவில் 6 லட்சம் ரூபாயை திருப்பி தந்து விடுவதாகவும் போலீசில் புகார்அளித்தால் பிரச்சினை செய்வதாகவும் மிரட்டியுள்ளார். மேலும் அவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து விட்டதாகவும், உண்மையை கூறியுள்ளார். இதனையடுத்து மனவேதனை அடைந்த சுனில்குமார் கடந்த சனிக்கிழமை இரவு அலிபிரி காவல் நிலையத்தில் சுஹாசினி மீது புகார் அளித்துள்ளார்.