viral video: மும்பையின் குடியிருப்பு பகுதியில் காரை விழுங்கிய சிங்க்ஹோல்..!

Default Image

மும்பையில் உள்ள குடியிருப்பு பகுதியில் காரை சிங்க்ஹோல் ஒன்று முழுவதும் விழுங்கியுள்ள வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. தற்போது அங்கிருக்கும் கட்கோபர் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் இருந்த நீல நிற கார் ஒன்று முழுவதுமாக சிங்க்ஹோலில் மூழ்கிய வீடியோ வைரலாகி வருகிறது. முதலில் இந்த காரின் முன்பகுதி சக்கரங்கள் உள்ளே சென்றது, அதனை தொடர்ந்து காரின் பின்பகுதியும் பின்னர் முழுவதுமாக கார் தண்ணீரில் மறைந்துவிடுகிறது.

இதனால் இந்த இடத்தில் இதற்கு முன் கிணறு இருந்தது என்பது தற்போது வீடியோவால் வெளிவந்துள்ளது. இந்த சிங்க்ஹோல் வாகன நிறுத்துமிடத்திற்கு கீழே மூடப்பட்ட கிணறு என்பதை கண்டுபிடித்துள்ளனர். இது குடியிருப்பு பகுதியில் இருப்பவர்களால் மூடப்பட்டு இவ்விடத்தை வாகன நிறுத்துமிடமாக மாற்றியுள்ளனர் என்றும் தெரிவந்துள்ளது. கனமழை காரணத்தால் இந்த கிணறு தண்ணீரால் நிரம்பியுள்ளது. மும்பையில் கனமழை பெய்து வரும் இந்நேரத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்